மீண்டும் வெடித்த போதைப்பொருள் சர்ச்சை: பாலிவுட், கன்னட திரையுலகினர் சிக்கினர்

பாலிவுட்டில் மீண்டும் சர்ச்சையாகியுள்ள போதைப்பொருள் பயன்பாடு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
மீண்டும் வெடித்த போதைப்பொருள் சர்ச்சை: பாலிவுட், கன்னட திரையுலகினர் சிக்கினர்
x
கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணித்த போது, போதைப்பொருள் விவகாரம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது

சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியதாக அவரது நெருங்கிய தோழியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட, பிரபல நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் என பலரிடம் நீண்டது விசாரணை..

பாலிவுட்டை தொடர்ந்து கன்னட திரையுலகிலும் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்த, நிமிர்ந்து நில் படத்தில் நடித்த ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரை கைது செய்தது போலீஸ்

கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த இந்த போதைப்பொருள் சர்ச்சை, மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது

காந்தி ஜெயந்தி தினத்தன்று சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடந்ததாக ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டார். 

இதில் பாலிவுட் பிரபலங்கள், செல்வந்தர்களுக்கு தொடர்பு இருப்பதாக என்சிபி கூறியுள்ளது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது

இதுபோன்று திரையுலக பிரபலங்கள், அவர்களது வாரிசுகள் பல்வேறு வழக்குகளில் சிக்குவது புதிதல்ல. 2014ஆம் ஆண்டு ஜாக்கிசானின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு, 6 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். 

போதைப்பொருள் மட்டுமல்ல, ஆபாச படம் எடுத்ததாக ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா கைதானது, பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைதானது என திரையுலக பிரபலங்கள் பலர் சர்ச்சைகளில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்