டிஜிட்டல் சுகாதார சேவை திட்டம் - காணொலி வாயிலாக தொடங்கி வைத்த மோடி
பதிவு : செப்டம்பர் 27, 2021, 02:28 PM
மக்களின் சுகாதார பதிவுகள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் விதமாக டிஜிட்டல் சுகாதார இயக்கம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மக்களின் சுகாதார பதிவுகள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் விதமாக டிஜிட்டல் சுகாதார இயக்கம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரதினத்தின் போது பேசிய பிரதமர் மோடி, நாடு தழுவிய அளவில் டிஜிட்டல் சுகாதார சேவை திட்டம் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்பிறகு இந்த திட்டம் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், தையூ-தாமன் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் , இன்று நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட டிஜிட்டல் சுகாதார இயக்கம் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. சுகாதார அட்டை பெறுவோரின் மருத்துவ பரிசோதனைகள், நோய் பாதிப்பு, பரிசோதித்த மருத்துவர்கள், அளிக்கப்பட்ட மருந்துகள் குறித்த தகவல்கள் டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்கப்பட உள்ளன. இந்த சுகாதார அடையாள அட்டையை கையோடு எடுத்து செல்ல முடியும் என்பதால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கு வேண்டுமானாலும் மருத்துவரை அணுக முடியும், திட்டத்தை தொடங்கி வைத்தப்பின் பேசிய மோடி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அட்டை வழங்கப்படும் என கூறினார்.  நாட்டில் தொடங்கப்பட்டுள்ள 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் சுகாதாரத்துறையை மாற்றி அமைக்கும் விதமாக மருத்துவ கல்வியில் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

(01/10/2021) ஆயுத எழுத்து : தனித்துப் போட்டி : விஷப்பரிட்சையா ? பலப்பரிட்சையா ?

சிறப்பு விருந்தினர்கள் : இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் // ப்ரியன், பத்திரிகையாளர் // பாலு, பா.ம.க // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்

51 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

50 views

பிற செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

8 views

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது .

10 views

கூடங்குளம் அணுகழிவுகள் - மத்திய அரசு விளக்கம்

கூடங்குளம் அணுகழிவுகள் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அணுமின் நிலைய வளாகத்துக்கு உள்ளே, சேமித்து வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

7 views

"ஊட்டியில் ஃபிலிம் சிட்டி அமைக்க வேண்டும்" | Film City | Ooty

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், பிலிம்சிட்டி அமைக்க வேண்டும் என, மத்திய அரசு திமுக எம்.பி. ஆ.ராசா கோரிக்கை வைத்துள்ளார்.

12 views

கமர்ஷியல் சிலிண்டர் விலை உயர்வு

வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை 101 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து இரண்டாயிரத்து 234 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.

10 views

சபரிமலையில் கூடுதல் தளர்வுகள்கேரள அரசு அனுமதிக்குமா?

ஐயப்பன் கோயிலில் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி முதல்வர் பினராயி விஜயனுக்கு தேவஸம்போர்டு கடிதம் எழுதியுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.