டிஜிட்டல் சுகாதார சேவை திட்டம் - காணொலி வாயிலாக தொடங்கி வைத்த மோடி

மக்களின் சுகாதார பதிவுகள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் விதமாக டிஜிட்டல் சுகாதார இயக்கம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டிஜிட்டல் சுகாதார சேவை திட்டம் - காணொலி வாயிலாக தொடங்கி வைத்த மோடி
x
மக்களின் சுகாதார பதிவுகள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் விதமாக டிஜிட்டல் சுகாதார இயக்கம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரதினத்தின் போது பேசிய பிரதமர் மோடி, நாடு தழுவிய அளவில் டிஜிட்டல் சுகாதார சேவை திட்டம் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்பிறகு இந்த திட்டம் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், தையூ-தாமன் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் , இன்று நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட டிஜிட்டல் சுகாதார இயக்கம் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. சுகாதார அட்டை பெறுவோரின் மருத்துவ பரிசோதனைகள், நோய் பாதிப்பு, பரிசோதித்த மருத்துவர்கள், அளிக்கப்பட்ட மருந்துகள் குறித்த தகவல்கள் டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்கப்பட உள்ளன. இந்த சுகாதார அடையாள அட்டையை கையோடு எடுத்து செல்ல முடியும் என்பதால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கு வேண்டுமானாலும் மருத்துவரை அணுக முடியும், திட்டத்தை தொடங்கி வைத்தப்பின் பேசிய மோடி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அட்டை வழங்கப்படும் என கூறினார்.  நாட்டில் தொடங்கப்பட்டுள்ள 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் சுகாதாரத்துறையை மாற்றி அமைக்கும் விதமாக மருத்துவ கல்வியில் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.










Next Story

மேலும் செய்திகள்