ராஜஸ்தான் காங்கிரஸில் மீண்டும் குழப்பம்? : டெல்லியில் முகாமிடும் சச்சின் பைலட்

பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் குழப்பமான சூழல் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
ராஜஸ்தான் காங்கிரஸில் மீண்டும் குழப்பம்? : டெல்லியில் முகாமிடும் சச்சின் பைலட்
x
இந்திய அரசியலில் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வரும் விவகாரம் முதலமைச்சர்கள் மாற்றம்..

உத்தரகாண்ட், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் ஆளும் பாஜக, தேர்தலை கணக்கில் வைத்து முதலமைச்சர்களை அடுத்தடுத்து மாற்றியது

மறுபக்கம் பஞ்சாப்பில் தொடர்ந்து நீடித்து வந்த அரசியல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முதலமைச்சரை மாற்றியது காங்கிரஸ் தலைமை...


அடுத்ததாக இந்த வரிசையில் ராஜஸ்தானும் இணைந்துவிடுமோ என டெல்லி அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

இதற்கு காரணம் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், அம்மாநில காங்கிரஸ் முகமான சச்சின் பைலட்டிற்கும் இடையே நீடிக்கும் பனிப்போர் தான் என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்...

முதலமைச்சருடன் ஏற்பட்ட மனகசப்பில் கடந்த ஆண்டு சச்சின் பைலட் உட்கட்சியிலேயே போர்க்கொடி உயர்த்த, அவரிடம் இருந்த துணை முதலமைச்சர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை காங்கிரஸ் தலைமை பறித்தது. இருப்பினும், ராகுலுடனான நல்லுறவால் கட்சி பணியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

இந்த சூழலில் பஞ்சாப்பில் முதலமைச்சர் மாற்றப்பட, ராஜஸ்தான் விவகாரத்தை கையில் எடுத்து டெல்லிக்கு படையெடுத்துள்ளார் சச்சின் பைலட்.



Next Story

மேலும் செய்திகள்