"இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்" - பிரதமர் மோடி

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும் என ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலக தடுப்பூசி நிறுவனங்களை இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
x
நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,  ஒட்டுமொத்த உலகமும் 100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பெருந்தொற்றை எதிர்க்கொண்டு வருகிறது என்றும் இந்த பெருந்தொற்றில் உயிரிழந்தவர்களுக்கு  அஞ்சலி, அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்களையும் தெரிவிப்பதாக கூறினார். பன்முகத் தன்மைதான் வலியாமையான எங்களது ஜனநாயகத்தின் அடையாளம் என்றும் இந்தியா ஒருங்கிணைந்த சமத்துவமான வளர்ச்சியை நோக்கி முன்னேற்ற பாதையில் நகர்கிறது என்றும் கூறினார்.இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு தரமான சுகாதார வசதிகள் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறிய பிரதமர் மோடி, பலர் வீட்டு உரிமையாளராக்கப்பட்டுள்ளனர் என பெருமையாக குறிப்பிட்டார்.இந்தியா வளர்ச்சி அடையும்போது உலகமும் வளர்ச்சி அடைகிறது என்றும் இந்தியா சீர்திருத்தம் அடைகின்றபோது ஒட்டுமொத்த உலகமும் மாற்றங்களை அடைகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.இந்தியாவில் டி.என்.ஏ. அடிப்படையிலான கொரோனா தடுப்பூசியும், மூக்குக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தும் உருவாக்கப்படுகிறது எனக் கூறிய பிரதமர் மோடி,உலக நாடுகளில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை இந்தியாவிற்கு வந்து தயாரிக்குமாறு அழைப்பு விடுத்தார்.



Next Story

மேலும் செய்திகள்