"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்" - 33 தலைவர்களுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று, பிகார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ், சோனியாகாந்தி மாயாவதி, ஸ்டாலின் உள்ளிட்ட 33 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - 33 தலைவர்களுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்
x
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று, பிகார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ், சோனியாகாந்தி மாயாவதி, ஸ்டாலின் உள்ளிட்ட 33 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், கடந்த 23 ம் தேதி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில்,2021 இல் சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது சாத்தியமல்ல என தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார்.இது பின்தங்கிய வகுப்பினருக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து தொடர்ச்சியாக விவாதங்களும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வர கூடிய சூழ்நிலையில்,சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்பதற்கு நியாயமான ஒரு காரணம் கூட இல்லை என தெரிவித்துள்ளார்.எனவே மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள மத்திய அரசை நாம் அனைவரும் வலியுறுத்த வேண்டும் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்