நடப்பு நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 47% வளர்ச்சி - மத்திய நிதி அமைச்சகம்

நடப்பு நிதி ஆண்டில் மொத்த நேரடி வரி வசூல் 47% வளர்ச்சி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 47% வளர்ச்சி - மத்திய நிதி அமைச்சகம்
x
நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரி வசூல் 5 லட்சத்து 70 ஆயிரத்து 568 கோடி ரூபாயாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் நிகர நேரடி வரி வசூல் 3 லட்சத்து 27 ஆயிரத்து 174 கோடியாக மட்டுமே இருந்த நிலையில்

நடப்பாண்டில் நிகர நேரடி வரி வசூல் 74 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் 2019-2020 ம் நிதியாண்டோடு ஒப்பிடும்போதும் நிகர வரு வசூல் 27 சதவிகிதம்  வளர்ச்சி கண்டுள்ளது.

இதுவரை நிகர நேரடி வரி வசூலில் கார்ப்பரேட் வரி 3 லட்சத்து இரண்டாயிரத்து 975 கோடியாகவும்

தனிநபர் வரி 2 லட்சத்து 67 ஆயிரத்து 593 கோடியாகவும் உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் மொத்த நேரடி வரி வசூல் 47% வளர்ச்சி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்