"ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் - 300க்கும் மேற்பட்டோர் கைது"
பதிவு : செப்டம்பர் 23, 2021, 07:54 PM
மும்பையில் ஓராண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக 300க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தெரிவித்துள்ளார்.மும்பையில் ஒராண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 114 வழக்குகள் போதைப்பொருள்  தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சமீர் வான்கடே  கூறினார்.மேலும், மும்பை, தானே, பால்கர் மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் இருந்து 30 கிலோ சரஸ், 12 கிலோ ஹெராயின், 2 கிலோ கோகோயின், 350 கிலோ கஞ்சா, 25 கிலோ மெஃபெட்ரான் உள்ளிட்ட பல வகையான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.