ஓட்டுனர்கள் தூங்கினால் எச்சரிக்கும் கருவிகள் - ஐரோப்பிய சரக்கு வாகனங்களில் பயன்பாடு

வாகனங்களை ஓட்டும் போது, ஓட்டுநர்கள் தூங்கினால் அவர்களை எச்சரிக்கை செய்யும் சென்சார் கருவிகள் பொருத்தும் கொள்கைகளை உருவாக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யோசனை தெரிவித்துள்ளார். ஓட்டுநர்களை கண்காணிக்கும் சென்சார் செயல்படும் விதம் பற்றி தற்போது பார்க்கலாம்...
ஓட்டுனர்கள் தூங்கினால் எச்சரிக்கும் கருவிகள் - ஐரோப்பிய சரக்கு வாகனங்களில் பயன்பாடு
x
சரக்கு வாகனங்களை நீண்ட தூரத்திற்கு தொடர்ந்து ஓட்டுபவர்கள், வாகனத்தை ஓட்டும் போதே தூங்குவதால், ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, ஐரோப்பிய நாடுகளில் சரக்கு வாகன ஓட்டுநர்கள் தூங்கினால் எச்சரிக்கை விடுக்கும் சென்சர் கருவிகள் உள்ளன. இந்திய சரக்கு வாகனங்களில் இதே போன்ற கருவிகளை பொருத்த ஒரு கொள்கையை உருவாக்கும்படி, அதிகாரிகளிடம் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார். ஓட்டுனர்கள் தங்களின் கண் இமைகளை சிமிட்டுகிறார்களா என்பதை சென்சார் கருவிகள் தொடர்ந்து கண்காணிக்கும்.ஸ்டீரிங் வளையத்தை இறுக்கி பிடித்திருக்கிறார்களா அல்லது கை பிடி தளர்கிறதா என்பதை துல்லியமாக அளவிடும் சென்சர் கருவிகள் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
வாகனம் நேர் கோட்டில், ஒரே பாதையில் செல்லாமல் தடம் மாறுகிறதா என்பதை கண்காணிக்கும் கருவிகளும் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும். ஆக்சிலரேட்டர் மற்றும் பிரேக் பயன்பாடுகளை
கண்காணிக்கும் கருவிகள் மூலம் ஓட்டுனர் தூங்கி விட்டாரா என்பதை கண்டறிய முடியும்.ஓட்டுனர் தூங்கி விட்டதை கண்டறியும் இத்தகைய கருவிகள், உடனடியாக அபாய சங்கை ஒலிக்கச் செய்து, ஓட்டுனரை எச்சரிக்கும்.வளர்ந்த நாடுகளில் இவற்றின் பயன்பாடு பரவலாக உள்ளதைப் போல இந்தியாவிலும் இவற்றை கட்டாயமாக்கினால், சாலை விபத்துகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும்.இதுபோன்ற சென்சார் கருவிகள் விரைவில் இந்திய சாலைகளில் வலம் வரும் சரக்கு வாகனங்களில் பொருத்தும் வகையில் மத்திய அரசு விதிமுறைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்