பெகாசஸ் விவகாரம் - அடுத்த வாரம் உத்தரவு

பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க, நிபுணர் குழு அமைக்க கோரிய வழக்கில் அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
பெகாசஸ் விவகாரம் - அடுத்த வாரம் உத்தரவு
x
பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் வேவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியானதால், சர்ச்சை எழுந்துள்ளது.பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தை விசாரிக்க சிறப்பு குழு அமைக்க கோரிய மனுக்களை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு விசாரித்து வருகிறது.இந்த விவகாரத்தில் மத்திய அரசு சுற்றிவளைத்து பேசுவதால் எவ்வித பலனுமில்லை என்றும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கடந்த 13-ஆம் தேதி விசாரணையின் போது தலைமை நீதிபதி என்.வி. ரமணா  தெரிவித்திருந்தார்.மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து 3 நாட்களுக்குள்  உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம் என தலைமை நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், வேறோரு வழக்கு தொடர்பாக, மூத்த வழக்குரைஞர் சி.யு. சிங் முறையிட்டபோது, பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைக்க உள்ள நிபுணர் குழுவில் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க முடியவில்லை என சிலர் தெரிவித்துள்ளதாக தலைமை நீதிபதி என்.வி. ரமணா குறிப்பிட்டார்.பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க நிபுணர் குழு  அமைக்க கோரிய வழக்கில் அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்