2022இல் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி உற்பத்தி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 23, 2021, 04:55 PM
2022க்குள் இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க குவாட் நாடுகளின் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி உற்பத்தியில், உலகின் மிகப் பெரிய தொழிற்சாலையாக, புனேவில்  உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உள்ளது. அக்டோபர் மாதத்தில் சுமார் 22 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.உலக சுகாதார நிறுவனத்தின் கோவேக்ஸ் திட்டத்திற்காக, ஏற்கனவே ஒப்புக்கொண்ட படி, அடுத்த மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை, இந்தியா மீண்டும் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்ஷுக் மண்டவியா திங்கள் அன்று அறிவித்திருந்தார்.இந்நிலையில் புதன் அன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு மாநாட்டில், காணொலி மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது, குவாட் நாடுகளின் கூட்டமைப்பு, 2022க்குள் இந்தியாவில்100 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும், அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அளிக்கும் என்றார்.இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ள 100 கோடி தடுப்பூசிகள் உலக அளவில் தடுப்பூசி பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் எனவும் பைடன் தெரிவித்தார்.அடுத்த ஆண்டில் தென் ஆப்பரிக்காவில், 50 கோடி ஜான்சன் அண்ட் ஜான்டன் நிறுவன தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தேவையான நிதி மற்றும் இதர உதவிகளை அளித்து வருவதாக கூறினார். இந்த 50 கோடி தடுப்பூசிகள் தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளஆப்பரிக்க நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தீவிரமாகும் எரிமலை வெடிப்பு - வழிந்தோடும் நெருப்புக் குழம்பு

ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வெளியான நெருப்புக் குழம்பு சென்ற இடங்களையெல்லாம் சாம்பலாக்கி சென்றுள்ளது.

333 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் சேதம் : உயிரிழந்தோரின் உடல்கள் கண்டெடுப்பு

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி மோப்ப நாய் உதவியுடன் தொடர்கிறது.

7 views

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல் சாந்தி நியமனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல் சாந்தியாக என்.பரமேஸ்வரன் நம்பூதிரியும், மாளிகை புரம் மேல் சாந்தியாக சம்பு நம்பூதிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

12 views

"தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைப்பு" - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி

கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

9 views

"பால் உற்பத்தியை அதிகரிக்கும் சாக்லேட்" - மத்தியப்பிரதேச பல்கலை. கண்டுபிடிப்பு

கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சாக்லேட் வடிவிலான தீவனத்தை மத்தியபிரதேச பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

24 views

கொக்காயர் கிராமத்தில் வெள்ளம் - 2 வீடுகளை சேர்ந்த 8 பேர் மாயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கொக்காயர் என்ற பகுதியில், வெள்ளத்தில் 4 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

122 views

கேரளாவில் பெய்து வரும் கன மழை - மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்

கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், காஞ்சிரப்பள்ளி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.