பிரதமர் மோடி அமெரிக்க பயணம் - ஐநாவில் பேச்சு

நான்கு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்கும் மோடி, பின்னர், ஐநா கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.
பிரதமர் மோடி அமெரிக்க பயணம் - ஐநாவில் பேச்சு
x
அமெரிக்க புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, குவாட் தலைவர்களை தனித் தனியாகவும், இரு தலைவர்களாகவும் சந்திக்க உள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ- பைடன் அழைப்பின் பேரில் செல்வதாகவும், 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நான்கு நாள் பயணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்திய-அமெரிக்க உறவு, உலகளாவிய பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த பங்களிப்பு குறித்து பேச உள்ளதாகவும், துணை அதிபர் கமலா ஹாரீஸை சந்தித்து, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  அதிபர் ஜோ பைடன், ஆஸ்ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், ஜப்பான் பிரதமர் சுகா ஆகியோருடன் எதிர்கால முன்னெடுப்பு குறித்தும், இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்தும் பேச உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். சர்வதேச சவால்கள் குறித்து ஐநா சபையில் பேச உள்ளதாக கூறும் பிரதமர் மோடி, கொரோனா பரவல், பருவநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் பேச உள்ளதாக விளக்கி உள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்