"இந்தியா தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறது" - மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா

இந்தியா அடுத்த மாதத்தில் இருந்து தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியா தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறது - மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா
x
நாடு முழுவதும் கடந்த ஜனவரியில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. உலகிற்கு தேவையான மருந்துகளை தயாரிக்கும் கேந்திரமாக விளங்கும் இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் பணி துரிதகதியில் நடைபெற்றது.  அவ்வாறு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள்  இந்தியர்களுக்கு செலுத்தப்பட்டதற்கு மத்தியில் பூடான், நேபாளம், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட அண்டைய நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் இலவசமாகவும், வர்த்தக நோக்கத்திலும் வழங்கப்பட்டன. இவ்வாறு 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை 76 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. கொரோனா 2-வது அலை வேகம் எடுக்கவும், இந்திய மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்கிய மத்திய அரசு, தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. தொடர்ச்சியாக தடுப்பூசி தயாரிக்கும் பணியும், மக்களுக்கு செலுத்தும் பணியும் விஸ்தரிக்கப்பட்டன. மே மாதம் 4 கோடியே 90 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் 10 கோடி டோசாக அதிகரித்தது. இதேபோன்று கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பும் 90 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 50 ஆயிரமாக அதிகரித்தது.  மக்களுக்கு தடுப்பூசி செலுத்துதலிலும் இந்தியா சிறபாக செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இரண்டரை கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதனை படைத்தது.இந்தியாவில் முதல் டோஸ் செலுத்தியோர் எண்ணிக்கை 61 கோடியையும், 2-வது டோஸ் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 21 கோடியும் நொருங்கியுள்ளது. சுமார் 82 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் அக்டோபர் மாதத்திலிருந்து இந்தியா, தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யவிருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான கூட்டுப்போரில் உலகிற்கு வழங்கிய உறுதியை நிறைவேற்ற உபரி தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதிக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன், 30 கோடிக்கும் அதிகமான டோசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்