வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு - மாணவர்கள் உறுதிமொழி அளிக்க உத்தரவு

வரதட்சணை வாங்கவும், கொடுக்கவும் மாட்டேன் என்ற பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமென பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி வைத்த விநோதம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு - மாணவர்கள் உறுதிமொழி அளிக்க உத்தரவு
x
வரதட்சணை வாங்கவும், கொடுக்கவும் மாட்டேன் என்ற பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமென பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி வைத்த விநோதம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் அதிகரித்து வரும் வரதட்சணை கொடுமையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது மாநிலத்தையே உலுக்கியது.வரதட்சணைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அம்மாநில ஆளுநர் ஆரிப் கான் முகம்மது உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டார்.அப்பொழுது வரதட்சணை குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்திய ஆளுநர் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ அல்லது வற்புறுத்தவோ மாட்டேன் என பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்றார். இந்த நிலையில் கேரளாவில் உள்ள  காலிகட் பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட காலிகட் பல்கலைக்கழகம், நடப்பு கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களும், பெற்றோரும் வரதட்சணை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமென கூறியுள்ளது. அதாவது,  வரதட்சணை வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன் என்றும், மணமகன் அல்லது மணமகனின் பெற்றோர் வரதட்சணை கேட்டு வற்புறுத்த மாட்டேன் என கையெழுத்திட வேண்டும் என்றது. அப்படி வரதட்சணை தொடர்பான சட்டங்களை மீறினால், பட்டப்படிப்பை ரத்து செய்யலாம் என உறுதி மொழியளிக்கவும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.  பல்கலை கழகத்தின் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக சட்டமாக்க முடியாது என்ற போதிலும் விழிப்புணர்வுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்