கொரோனாவை வெற்றிகரமாக கையாளும் குஜராத் - எப்படி சாத்தியமானது?

கொரோனாவை வெற்றிகரமாக கையாளும் மாநிலமாக மாறியுள்ளது, குஜராத் மாநிலம்...
x
கொரோனாவை வெற்றிகரமாக கையாளும் மாநிலமாக மாறியுள்ளது, குஜராத் மாநிலம்...

 
ஏறத்தாழ 500 நாட்களுக்கு பிறகு, அதாவது கடைசி 9 மாதங்களில் முதல் முறையாக கடந்த ஞாயிறு அன்று, அம்மாநிலத்தில் வெறும் 8 பேரிடம் மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 
 
33 மாவட்டங்கள் ஆறு நகராட்சிகளை கொண்ட அம்மாநிலத்தில் தற்போது 16 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.
 
குஜராத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது136 ஆக உள்ளது. 
 
சூரத் மற்றும் வதோதரா மாவட்டங்களில் தலா 4 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.. 
 
மீதமுள்ள 31 மாவட்டங்களிலும் ஒருவருக்கு கூட தொற்று கண்டறியப்படவில்லை... 
 
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது, அகமதாபாத் நகராட்சி.
 
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு நூலகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்கம், 
 
அரசு அலுவலங்கள், பூங்காக்கள் மற்றும் குளக்கரை, ஏரிக்கரையோரம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், முதல் தவணை செலுத்தி விட்டு, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காத்திருப்பவர்களுக்கும் பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் மற்றும் அரசு அலுவலகங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
சுமார் 7 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத் மாநிலத்தில் தற்போது வரை நாட்டிலேயே அதிகபட்சமாக சுமார் 5 கோடியே 35 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

அடுத்தடுத்து நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் வரவுள்ள நிலையில், தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணியையும், கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றுவதிலும் அம்மாநிலம் முனைப்பு காட்டி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்