பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி: பதவிப் பிரமாணம் செய்து வைத்த பன்வாரிலால்

பஞ்சாப் மாநில 17-வது முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி, பதவியேற்றுக் கொண்டார்.
x
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில், முதல்வராக இருந்த கேப்டன் அம்ரீந்தர் சிங் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, பஞ்சாபின் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். சண்டிகரில் உள்ள சட்டப் பேரவை வளாகத்தில் சரண்ஜித் சிங் சன்னிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரி லால் புரோகித், பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பஞ்சாப் மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல்முறை பதவி வழங்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து, அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். தற்போது, நாட்டின் ஒரே  தலித் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்