"மோடி பிறந்தநாளில் மட்டும் செயல்படும் மாநிலங்கள்"- முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட்

பாஜக ஆளும் வடமாநிலங்களில் பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று தினசரி எண்ணிக்கையை விட அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பிரதமர் தினந்தோறும் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மோடி பிறந்தநாளில் மட்டும் செயல்படும் மாநிலங்கள்- முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட்
x
மோடியின் பிறந்த நாளான நேற்று ஒரே நாளில் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. குறிப்பாக உத்திரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டன. இது குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மோடி பிறந்த நாளுக்கு மட்டுமே பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் துடிப்புடன் இருப்பதாகவும், பிற நாட்களில் செயலிழந்து இருப்பதாகவும் விமர்சித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்