ராஜஸ்தான் திருமண கட்டாய பதிவு சட்ட திருத்தம் - ராஜஸ்தான் பாஜக கடும் எதிர்ப்பு

ராஜஸ்தானில் குழந்தை திருமணத்தை கட்டாயம் பதிவுசெய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் திருமண கட்டாய பதிவு சட்ட திருத்தம் - ராஜஸ்தான் பாஜக கடும் எதிர்ப்பு
x
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு, அந்த மாநில திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் செய்து, அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவும் செய்யும் வகையில் சட்டம் இயற்றி உள்ளது. இதன்படி, குழந்தைகளுக்கு திருமணம் நடந்தாலும், 30 நாட்களுக்குள் பெற்றோர் அதனை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏக்கள், குழந்தை திருமணத்தை இந்த சட்டம் ஊக்குவிக்கும் என குற்றம்சாட்டி உள்ளனர். அதே சமயம், இந்த சட்டம் குழந்தை திருமணத்துக்கு வழிவகுக்காது என்றும், சட்ட சான்றளிக்கவே இவ்வாறு கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. குழந்தை திருமணத்துக்கு தடை உள்ள நிலையில், அதனை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ராஜஸ்தானில் சட்டம் இயற்றப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.




Next Story

மேலும் செய்திகள்