"கொரோனா பரவலால் வேலை இழப்பு : வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்" - விமான போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் எழுதிய கேரள முதல்வர்

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு உதவும் விதமாக, மத்திய அரசு விமான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
கொரோனா பரவலால் வேலை இழப்பு : வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் - விமான போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் எழுதிய கேரள முதல்வர்
x
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு உதவும் விதமாக, மத்திய அரசு விமான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பரவலால் வேலை இழந்து, பலர் வெளிநாடுகளில் தவித்து வரும்நிலையில், விமான கட்டணம் அதிகரித்து இருப்பது அவர்களை மேலும் பாதிக்கும் என்று கூறி உள்ளார். இதனால், விமான கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்