ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு - காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் வியாழன் அன்று நடைபெற உள்ள ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு - காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு
x
சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய எட்டு ஆசிய நாடுகள், அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் ஒன்றாக செயல்பட, 2002இல், ஷாங்காய் ஒத்துழைப்பு  அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் 21ஆவது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்ற உள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், துஷான்பே சென்று நேரில் கலந்து கொள்கிறார். சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், பாகிஸ்தான் பிரதமர் இமான் கான் மற்றும் இதர உறுப்பினர்  நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆப்கானிஸ்தான் நிலவரம், கொரோனா பாதிப்புகள், சர்வதேச பயங்கரவாதம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பற்றி இந்தியா விவாதிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த உச்சி மாநாட்டிற்கு ஈரான் பார்வையாளராக அழைக்கப்பட்டுள்ள நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஈரானும் உறுப்பினராக சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. வியாழன் அன்று துஷான்பேயில் நடைபெற உள்ள, ரஷ்யாவின் தலைமையில் செயல்படும் கூட்டு பாதுகாப்பு அமைப்பின், ஆப்கானிஸ்தான் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ள உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்