கோயில்களில் பாகுபாடு - நீதிமன்றம் சாடல்

கேரளாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கோயில்களில் பாகுபாடு காட்டக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கோயில்களில் பாகுபாடு - நீதிமன்றம் சாடல்
x
கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி பிள்ளை என்பவரது மகனின் திருமணம் குருவாயூர் கோவிலில் நடைபெற்றது.  இந்த திருமண நிகழ்ச்சியில், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல நடிகர் மற்றும் நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.இந்த திருமண விழாவை யொட்டி, கோயில் வளாகம் முழுவதும் ஆடம்பர அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கை தாமாக முன்வந்து கேரள உயர் நீதிமன்றம்  விசாரணைக்கு எடுத்தது.கொரோனா விதிமுறைப்படி, குருவாயூர் கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 12 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.ஆனால் தொழிலதிபரின் திருமண விழாவில் சமூக இடைவெளியின்றி நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.மேலும், கோயிலில் செய்யப்பட்ட நடை பந்தல் அலங்காரம்
தனியார் செக்யூரிட்டி ஊழியர்களை கோயில் வளாகத்தில் அனுமதித்தது தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருமணம் தொடர்பான வீடியோ சிசிடிவி கேமரா காட்சிகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பக்தர்களில் அதிகாரம் படைத்தவர்கள் என்றோ கூலித்தொழிலாளர்கள் என்றோ பாகுபாடு இல்லை என்றும் கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 5ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்