புறம்போக்கு நிலத்திற்கு இலவச பட்டா "13,500 பேருக்கு வழங்கப்பட்டது" - பினராயி விஜயன் பெருமிதம்

புறம்போக்கு நிலத்திற்கு இலவச பட்டா "13,500 பேருக்கு வழங்கப்பட்டது" - பினராயி விஜயன் பெருமிதம்
புறம்போக்கு நிலத்திற்கு இலவச பட்டா 13,500 பேருக்கு வழங்கப்பட்டது - பினராயி விஜயன் பெருமிதம்
x
புறம்போக்கு நிலத்திற்கு இலவச பட்டா "13,500 பேருக்கு வழங்கப்பட்டது" - பினராயி விஜயன் பெருமிதம் 

கேரளாவில் ஒரே நாளில் புறம்போக்கு நிலத்தை கைவசம் வைத்திருந்த 13 ஆயிரத்து 500 பேருக்கு அம்மாநில அரசு பட்டா வழங்கியுள்ளது.இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சியை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் செயல்படுத்த முடியாத வகையில் கேரளாவில் 1957 ஆம் ஆண்டு நில சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்து 500 பேருக்கு தங்கள் கைவசம் உள்ள நிலத்திற்கு இலவச பட்டா வழங்குவதாக கேரள அரசு அறிவித்த‌து. மேலும் வரும் 5 ஆண்டுகளில் தகுதியுள்ள அனைவருக்கும் கேரள அரசால் பட்டா வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்