செப்.24-ல் "குவாட்" மாநாடு - பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அழைப்பு

அமெரிக்காவில் வருகிற 24-ம் தேதி குவாட்(Quad ) கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது
செப்.24-ல் குவாட் மாநாடு - பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அழைப்பு
x
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் குவாட் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ஆண்டுதோறும் குவாட் உறுப்பு நாடுகளின் மாநாடு நடைபெறும் நிலையில், நடப்பு ஆண்டுக்கான குவாட் மாநாடு அமெரிக்காவில் வருகிற 24-ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவாட் மாநாட்டிற்கு அதிபர் ஜோ பைடன் தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுஹா ஆகியோருக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. நான்கு முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ள இந்த மாநாட்டில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பருவநிலை மாற்றம், இந்தோ-பசிபிக் பிராந்திய உறவு உள்ளிட்ட பல விவகாரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்