"கட்சி மாற பணம் கொடுப்பதாக பாஜக கூறியது" - கர்நாடக முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் சர்ச்சை பேச்சு
கர்நாடகாவில் கட்சி மாற பணம் கொடுப்பதாக பாஜக கூறியதாக, முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியின் போது, 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், அவரது ஆட்சி கவிழ்ந்தது. இந்த 16 பேரில் ஒருவரான ஸ்ரீமந்த் பாட்டீல், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து எடியூரப்பா ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார். எடியூரப்பா ராஜினாமா செய்த பின்னர், பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் ஸ்ரீமந்த்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவர், நேற்று செய்தியாளர்களிடம் சந்தித்த போது, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைய எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறோம் என பாஜக கூறியதாகவும், தான் பணம் வாங்காமால் அமைச்சர் பதவியை மட்டும் கேட்டதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். ஸ்ரீமந்த்தின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

