மயக்க மருந்து கொடுத்து ரயிலில் 3 பேரிடம் இருந்து 15 சவரன் திருட்டு- சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

திருவனந்தபுரம் சென்ற ரயிலில் பயணித்த கோவையைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயக்க மருந்து கொடுத்து ரயிலில் 3 பேரிடம் இருந்து 15 சவரன் திருட்டு- சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை
x
நிஜாமுதீனில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை நோக்கி சென்று  கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரள மாநிலத்தை  சேர்ந்த விஜயகுமாரி அவரது மகள் அஞ்சலி, கோவையை சேர்ந்த கவுசல்யா ஆகியோர் பயணித்தனர். ரயில் திருவனந்தபுரத்திற்கு சென்றடைந்த நிலையில் 3 பேரும் மயக்க நிலையில் இருந்துள்ளனர்.  ரயில்வே போலீசார் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் கோவை ரயில் நிலையத்தில்  உத்திரபிரதேசத்தை சேர்ந்த அஸ்கர் பாஷா என்பவர் பழகியுள்ளது சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்டறிந்தனர். மேலும், தண்ணீர் பாட்டிலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 3 பேரிடம் இருந்து 15 சவரன் நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையன் அஸ்கர் பாஷாவை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்