கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: "கூடுதலாக 316 ஆம்புலன்ஸ் சேவை" - கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் கூடுதலாக 316 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஆயிரத்து 500 பணியாளர்கள் பணிகளை துவக்கியுள்ளதாக கேரள சுகாதாரதுறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: கூடுதலாக 316 ஆம்புலன்ஸ் சேவை - கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
x
கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா  ஜார்ஜ் தமது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில்  கடந்த ஒரு ஆண்டுகளில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக 4 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு கொரோனா தொடர்பான சேவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், அவசர உதவி அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கூட்டு முயற்சிகளே இதற்குக் காரணம் என தெரிவித்தார். இந்த கால கட்டத்தில் 108 ஆம்புலன்சில் 3 பிரசவங்களும் நடைபெற்றதாக தெரிவித்த அவர், 38 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்புக்கான சேவை வழங்கப்பட்டதாகவும் கூறினார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 316 ஆம்புலன்ஸ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்