நிர்பயா சம்பவத்தை போன்ற கொடூரம் - மும்பையில் 34 வயதான பெண் டெம்போ வேனில் வைத்து கொடூர பலாத்காரம்
பதிவு : செப்டம்பர் 11, 2021, 07:17 PM
மும்பையில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உயிரை விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உயிரை விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மும்பை புறநகர் பகுதியான சஹிநாகாவில் வெள்ளிக்கிழமையன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 34 வயதான பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அப்போது அவரை பரிசோதனை  செய்ததில் அவரின் மர்ம உறுப்பில் இரும்பு கம்பியை வைத்து சிதைத்ததும் தெரியவரவே பெரும் அதிர்ச்சியடைந்தனர் மருத்துவர்கள். நிர்பயாவை போலவே கொடூரமாக அந்த பெண் தாக்கப்பட்டதும் தெரியவந்தது. 

சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே பெண்ணை கொடூரமாக தாக்கிய மோகன் சவுகான் என்ற நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். இவர் மீது பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த  பெண், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை பலியானார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. 

உயிரிழந்த அந்த பெண் யார்? அவரை கொலை செய்த நபர் யார்? இதுபோன்ற கொடூர கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. 

கடந்த வாரம் டெல்லியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவரும் இதே பாணியில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இப்போது மும்பையில் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது மக்களை அச்சமடைய வைத்துள்ளது... 


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

453 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

59 views

பிற செய்திகள்

வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை - ஜிஎஸ்டி தொழில்நுட்ப சீரமைப்பு குழு அமைப்பு

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக அஜித் பவார் தலைமையில் ஜிஎஸ்டி தொழில்நுட்ப சீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

13 views

ராஜஸ்தான் காங்கிரஸில் மீண்டும் குழப்பம்? : டெல்லியில் முகாமிடும் சச்சின் பைலட்

பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் குழப்பமான சூழல் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

15 views

4 நாடுகளின் குவாட் கூட்டமைப்பு... 120 கோடி தடுப்பூசிகளை அளிக்க திட்டம் - இந்தோ பசிபிக் நாடுகளுக்கு அளிக்கப்படும்

குவாட் நாடுகளின் கூட்டமைப்பு 120 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

10 views

போக்குவரத்து காவலரை தாக்கிய ஓட்டுநர் - இணையத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகள்

புதுச்சேரியில் போக்குவரத்து காவலரை மதுபோதையில் தாக்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கிருமாம்பாக்கம் பகுதியில் வாகனம் ஒன்று கட்டுப்பாடின்றி செல்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அதனை தடுத்த நிறுத்தி விசாரித்தனர்.

41 views

"இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்" - பிரதமர் மோடி

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும் என ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலக தடுப்பூசி நிறுவனங்களை இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

15 views

ஐ.நா. சபையின் 76 ஆவது அமர்வில் பிரதமர் மோடி உரை (தமிழில்)

நியூயார்க் சென்றுள்ள பிரதமர் மோடி ஐநா சபையின் 76 ஆவது அமர்வில் உரையாற்றினார்.

138 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.