குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி ராஜினாமா
பதிவு : செப்டம்பர் 11, 2021, 05:31 PM
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
65 வயதாகும் விஜய் ரூபானி, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் குஜராத்தின் முதலமைச்சராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், காந்திநகரில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை நேரில் சந்தித்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து பேசிய விஜய் ரூபானி, குஜராத் முதலமைச்சராக பணியாற்ற வாய்ப்பு தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். அடுத்த ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் ரூபானியின் இந்த திடீர் ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், துணை முதல்வராக உள்ள நிதின் பட்டேல், அடுத்த முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பாஜக ஆளும் கர்நாடகாவில் எடியூரப்பாவும், உத்தராகண்டில் தீரத் சிங் ராவத்தும் முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட நிலையில், தற்போது குஜராத்தில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

382 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

45 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

33 views

பிற செய்திகள்

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று

தான் மறைந்தாலும் தன் கவிகளால் சாகா வரம் பெற்ற முண்டாசுக் கவிஞன் பாரதியின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று.

0 views

"பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை"; தமிழக மக்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றிகள் - எல்.முருகன்

பாரதியின் 100-வது நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்த, பிரதமர் மோடிக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

7 views

ஆன்-லைன் மூலம் திருமணம் - கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

நாட்டிலேயே முதல் முறையாக ஆன்-லைன் மூலம் திருமணம் செய்துகொள்ள கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

8 views

சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு

சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த, அவற்றின் மீதான இறக்குமதி வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது.

5 views

த்ரிஷ்யம் பட பாணியில் நண்பரை கொன்று புதைத்த கொடூரம்

த்ரிஷ்யம் பட பாணியில் கேரளாவில் நண்பரை கொலை செய்து கட்டுமானம் நடந்த பகுதியில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

13 views

சிரிய அகதி குழந்தை போன்ற மரப்பாச்சி -போப்பாண்டவர் வரவேற்பு

சிரிய அகதி குழந்தை போன்ற மரப்பாச்சி -போப்பாண்டவர் வரவேற்பு

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.