மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று
பதிவு : செப்டம்பர் 11, 2021, 05:30 PM
தான் மறைந்தாலும் தன் கவிகளால் சாகா வரம் பெற்ற முண்டாசுக் கவிஞன் பாரதியின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று.
தான் மறைந்தாலும் தன் கவிகளால் சாகா வரம் பெற்ற முண்டாசுக் கவிஞன் பாரதியின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று... அவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...


"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்...அதை ஆங்கோரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்...வெந்து தணிந்தது காடு...தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ..." என்று கனல் தெறிக்கும் வார்த்தைகளால் சுதந்திரத் தீயை மூட்டியவர் தான் பார"தீ"...

எட்டயபுரம் மண்ணில் பிறந்த தமிழ்க் கவிஞன் சுப்பிரமணியனுக்கு பிறப்பிலேயே கிடைத்த கவிப்புலமையைப் பாராட்டி, எட்டயபுர மன்னன் சூட்டிய பெயர்தான் "பாரதி"...

பேரைக் கேட்கும்பொழுதே, நரம்புகளைப் புடைக்க வைக்கும் அசாத்திய மாய ஆற்றல் மீசைக் கவிஞனின் வரிகளுக்கு உண்டு...

இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவ ராசிகளையும் பார்த்து வினவுவதாய் அவர் எழுதிய பாடல்தான் நிற்பதுவே...நடப்பதுவே...

எழுதும் ஒவ்வொரு வரியிலும்...வார்த்தையிலும் தத்துவம்...பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ விஷயங்களை நாம் பார்க்கிறோம்...பாடம் படிக்கிறோம்...ஆனால் அவற்றின் உண்மைத் தன்மைதான் என்ன...மெய்யாலுமே அவை மெய்தானா...இல்லை வெறும் காட்சிப் பிழைகளா என்ற அவரின் வினாவில் தான் எத்தனை ஆழம்...

மனித இனத்தில் சாதிப்பிரிவினைகளை ஒழிக்க கத்தி கொண்டு சண்டை செய்யவில்லை பாரதி...மாறாக "தகரென்று கொட்டு முரசே...பொய்மைச் சாதி வகுப்பினை எல்லாம்..."என்று தன் வார்த்தைகளைக் கொண்டு போர் தொடுத்தார்....

மீசைக் கவிஞனுக்கு தமிழின் மீது அலாதி ஆசை...தேனினும் இனிய ஓசையுடைய தமிழைத் தான் மட்டும் கேட்டால் எப்படி...தரணி முழுவதும் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத் தான்..."தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று பொதுநலத்தோடு பாடினார்...

வீரமும் காதலும் தமிழர்க்கு அழகு...வீரமிகு பாடல்கலை எழுதிய பாரதிக்கு கண்ணம்மா மீது கொண்ட காதல் அளப்பறியது..."நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா..." என்று பாடலிலே தெரிந்திருக்கும், அழியும் உடலை பூமிக்கும், அழியா ஆன்மாவை கண்ணம்மாவுக்கும் பாரதி ஒப்படைத்து விட்டான் என்று...கண்ணம்மா வெறும் கற்பனை அல்ல...பாரதியைப் பொறுத்தவரை அவள் சூறையமுது...

தான் நாட்கணக்கில் பட்டினி கிடந்தாலும், "தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று உலக உயிர்களின் பசியைப் பொறுக்க முடியாமல் உலகை அழிக்க புறப்பட்டான்...

தன் விருப்ப தெய்வமான சக்தியிடம், "வல்லமை தாராயோ...இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே..." என்று பாடி வாழ்நாள் முழுவதும் தனக்காக எதுவும் கேட்காமல் தன்னலமற்று வாழ்ந்து மறைந்தார்...

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

453 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

59 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

14 views

வணிகம் மற்றும் வர்த்தக வார நிறைவு விழா - மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு

நாட்டின் மொத்த வேளாண் ஏற்றுமதியில், கடல்சார் ஏற்றுமதி 18 சதவீதம் என்றும், கடல் சார்ந்த ஏற்றுமதிக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

20 views

இரண்டு கிட்னிகள் செயலிழந்த சிறுமி - தைரியமாக இருக்குமாறு முதல்வர் ஆறுதல்

இரண்டு கிட்னிகள் செயலிழந்த சேலத்தை சேர்ந்த சிறுமியிடம் தொலைபேசி முதலமைச்சர் ஸ்டாலின், ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சை அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

79 views

"தலைவர்களோடு இணைத்து விஜய் படங்கள்"; "இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது" - விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் எச்சரிக்கை

தலைவர்களோடு, விஜய்யின் படங்களை இணைத்தும், தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகித்தும், இனிமேல் போஸ்டர்கள் வெளியிடக்கூடாது என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

12 views

நாகை தேவபுரீஸ்வரர் கோயிலில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

நாகை அருகே உள்ள குலோத்துங்க சோழர் கால கோயிலில் பூமிக்குள் புதைந்திருந்த 17 ஐம்பொன் சாமி சிலைகள் உள்பட 47 ஐம்பொன் பூஜை பொருட்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

23 views

கூட்டுறவு வங்கி நகைக்கடன் முறைகேடு - பொது நகை கடன்களை ஆய்வு செய்ய உத்தரவு

கூட்டுறவு வங்கி நகைக்கடன் முறைகேடு விவகாரத்தில் 5 சவரன் மட்டுமல்லாமல் வங்கிகளில் பெறப்பட்ட 100 சதவீதம் பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழுவை அமைத்ததுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.