விஸ்மயா தற்கொலை விவகாரம் - குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்

விஸ்மயா தற்கொலை விவகாரம் - குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்
விஸ்மயா தற்கொலை விவகாரம் - குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்
x
விஸ்மயா தற்கொலை விவகாரம் - குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் 

வரதட்சணை கொடுமையால், விஸ்மயா தற்கொலை  செய்த வழக்கில் கணவர் கிரண்குமார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம், கொல்லத்தில், விஸ்மயாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் கிரண்குமார் கைது செய்யப்பட்டார். 90 நாட்களுக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வில்லை என்றால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு  ஜாமின் வழங்கப்படும் என்ற நடைமுறை உள்ளது. எனவே, இதை தவிர்க்க  சாஸ்தம் கோட்டா நீதித்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை  தாக்கல் செய்தனர். 500 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையில், 92 பதிவுகள் மற்றும்  விஸ்மயாவின் மொபைல் போன் உட்பட 56 க்கும் மேற்பட்ட ஆதாரம், 102 சாட்சிகள் உள்ளனர். தற்கொலைக்கு தூண்டுவது உட்பட ஒன்பது பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்கொலைக்கு எதிரான இன்றைய நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி என்றும் டிஎஸ்பி ராஜ்குமார் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்