நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறக்கம்..

பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த, விமானங்களை தரையிறக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் முதல்முறையாக விமானப்படை விமானங்கள் தரையிறக்கப்பட்டது. இதுகுறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்....
x
பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த, விமானங்களை தரையிறக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் முதல்முறையாக விமானப்படை விமானங்கள் தரையிறக்கப்பட்டது. இதுகுறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்....

பாக். எல்லையையொட்டி விமானங்கள் தரையிறங்கும் சாலை

தரையை நோக்கி ஜெட் வேகத்தில் வரும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இந்த ஜாகுவார் விமானம் தரையிறங்கியது, இந்தியாவின் முதல் விமானம் தரையிறங்கும் வசதிக்கொண்ட தேசிய நெடுஞ்சாலை....

இந்த சாலை பாகிஸ்தான் எல்லையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விமானம் தரையிறங்கும் சாலை 3 கிலோ மீட்டர் நீளம் 

பாரத்மாலா திட்டத்தின் கீழ் ராஜஸ்தானின் சாத்தா-காந்தவ் இடையே சுமார் 197 கிலோ மீட்டர் நீளம் கொண்ட, நெடுஞ்சாலை 765 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

பார்மர் பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோ மீட்டர் நீளமுள்ள அவசரகாலத்தில் விமானம் தரையிறங்கும் வசதியும் உள்ளது.

33 மீட்டர் அகலம் கொண்ட சாலை இருபுறமும் விமான பார்க்கிங் வசதி

33 மீட்டர் அகலம் கொண்ட சாலையில் 3 ஹெலிபேட்களும் அமைக்கப்பட்டுள்ளன. இருபுறமும் விமானங்கள் நிற்கும் வகையில் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

19 மாதங்களில் கட்டமைக்கப்பட்ட சாலை

2019 ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்ட சாலை கட்டமைக்கும் பணி 19 மாதங்கள் கழித்து 2021 ஜனவரியில் நிறைவடைந்தது.

விமானம் தரையிறங்கும் சாலை தொடங்கி வைப்பு

விமானங்கள் தரையிறங்கும் வசதிக்கொண்ட இந்த சாலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில் விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே. பதாரியாவும் பங்கேற்றார்.

விமானப்படை விமானங்கள் ஹெலிகாப்டர்கள் தரையிறக்கம்

இந்திய ராணுவத்தின் இணை விமானப்படை தளமாக செயல்படவிருக்கும் இந்த சாலையில், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பதாரியா உள்ளிட்டோருடன், சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானப்படை விமானம் தரையிறங்கியது. இதைதொடர்ந்து ஜாகுவார், சுகோய் விமானங்கள், விமானப்படை ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி மேல் 
எழும்பியதை அவர்கள் பார்வையிட்டனர்.

பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும்

இந்த சாலை பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு வசதியையும், பாதுகாப்பு கட்டமைப்பையும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1971 பாகிஸ்தான் போரின் போது பதான்கோட் விமானப்படை தளத்தின் ஓடுதளத்தில் குண்டு வீசப்பட்டது, அப்போது இணை ஓடுதளம் எதுவும் இல்லை. இந்த நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த சாலை கட்டமைப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


"இந்தியாவில் மேலும் 19 விமானம் தரையிறங்கும் சாலை"

நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, காஷ்மீரின் பிஜ்பெஹாரா - சினார் பாக் நெடுஞ்சாலை, உத்தரகாண்டின் ராம்பூர்-கட்கோடம் நெடுஞ்சாலை, அசாமின் மோகன்பரி -தின்சுகியா நெடுஞ்சாலை உள்பட மேலும் 19 நெடுஞ்சாலைகளில்,  விமானங்களை அவசரமாக தரையிறக்கும் வகையில் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றார்.

விமானம் தரையிறங்கும் வசதிக்கொண்ட முதல் தேசிய நெடுஞ்சாலை 

கடந்த 2017 ஆண்டு ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. அந்த சாலை உத்தரபிரதேச மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ராஜஸ்தானில் தற்போது விமானங்கள் தரையிறக்கப்பட்டிருக்கும் சாலையே விமானங்கள் தரையிறங்கும் கட்டமைப்பு கொண்ட முதல் தேசிய நெடுஞ்சாலையாகும். 


Next Story

மேலும் செய்திகள்