200 கி. சாக்லேட் வைத்து செய்யப்பட்ட விநாயகர்

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாக்லேட்டை வைத்து விநாயகர் சிலையை ஹர்ஜிந்தர் சிங் குக்ரேஜா உருவாக்கியுள்ளார்.
x
பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாக்லேட்டை வைத்து விநாயகர் சிலையை ஹர்ஜிந்தர் சிங் குக்ரேஜா உருவாக்கியுள்ளார். லூதியானாவில் உணவகம் வைத்திருக்கும் குக்ரேஜா, கடந்த ஆறு வருடங்களாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த சாக்லேட்டினாலான விநாயகர் சிலையினை செய்து வருகிறார். இது, 10 நாட்களில் 200 கிலோ பெல்ஜிய டார்க் சாக்லேட்டைப் பயன்படுத்தி செதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இதனை விழாவிற்கு பின் பாலில் கரைத்து 45 லிட்டர் சாக்லேட் மில்க் ஷேக்காக மாற்றி அப்பகுதி குழந்தைகளுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்