பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்திற்கு 183 கோடியே 67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

தமிழகத்திற்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக 183 கோடியே 67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்திற்கு 183 கோடியே 67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
x
மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, 2021-22 ஆம் ஆண்டுக்கான பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 6-வது மாதத் தவணை தொகையாக 9 ஆயிரத்து 871 கோடி ரூபாயை 17 மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 59 ஆயிரத்து 226  கோடி ரூபாய் தகுதிவாய்ந்த மாநிலங்களுக்கு மானியமாக நடப்பு நிதியாண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 6வது தவணையின் மூலம் 183 கோடியே 67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021-22-ஆம் நிதி ஆண்டில் 17 மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம்  ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 452 கோடி ரூபாயை வழங்க நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில் இதுவரை 6 தவணையாக 59 ஆயிரத்து 226  கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்