ஆன்-லைன் வழியில் திருமணம் "தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தி தரப்படும்" - கேரள அரசு

ஆன்-லைன் மூலமாக திருமணம் செய்து கொள்ள முன் வருபவர்களுக்கு, தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என நீதிமன்றத்தில், கேரள அரசு தெரிவித்துள்ளது.
ஆன்-லைன் வழியில் திருமணம் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தி தரப்படும் - கேரள அரசு
x
ஆன்-லைன் மூலமாக திருமணம் செய்து கொள்ள முன் வருபவர்களுக்கு, தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என நீதிமன்றத்தில், கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் ஆன்-லைன் மூலம் திருமணம் செய்ய அனுமதி கோரி, திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின் என்ற பெண், கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தான் வெளிநாட்டில் தங்கியிருப்பதால், கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப இயலவில்லை என்றும், அதனால் ஆன்-லைன் மூலமாக திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, நீதிமன்றம் உத்தரவிட்டால் ஆன்-லைன் மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும், தொழில்நுட்ப வசதிகளை அரசு ஏற்படுத்தி தரும் எனவும் கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு திருமண சட்டத்தை திருத்துவது, மத்திய அரசு சார்ந்த விவகாரம் எனவும், அதில் சில நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் கேரள அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்