முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு - மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மையங்களை மாற்ற வாய்ப்பு கோரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு - மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
x
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மையங்களை மாற்ற வாய்ப்பு கோரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

தமிழகத்தைச் சேர்ந்த அனிதா உள்ளிட்ட 9 மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் லலித், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப முதுநிலை மருத்துவ நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அதுவரை முதுநிலை மருத்துவ நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் எனவும் வாதம் செய்தார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 
பயணம் செய்வதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, பேறு காலத்தை நெருங்கிய இரு மருத்துவர்களுக்கும் மட்டும் முதுநிலை மருத்துவ நீட் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டினர்.  இதுபோன்ற வாய்ப்பு பிற மருத்துவர்களுக்கு வழங்க முடியாது என தெரிவித்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்