பொதுத்துறை நிறுவனத்தை விற்ற மத்திய அரசு - நிறுவனத்தை வாங்கிய கேரள அரசு

கேரளாவில் மத்திய அரசால் விற்பனை செய்யப்பட்ட பெல் தொழிற்சாலையை அம்மாநில அரசே வாங்கியுள்ளது.
பொதுத்துறை நிறுவனத்தை விற்ற மத்திய அரசு - நிறுவனத்தை வாங்கிய கேரள அரசு
x
கேரளாவில் மத்திய அரசால் விற்பனை செய்யப்பட்ட பெல்  தொழிற்சாலையை அம்மாநில அரசே வாங்கியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோட்டில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் மத்திய அரசு 51 சதவீதம் பங்குகளும் ,கேரள அரசு  49 சதவீதம் பங்குகளும் வைத்துள்ளது. இந்நிலையில் அந்நிறுவனத்தில் வைத்துள்ள பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய  மத்திய அரசு முடிவு செய்த‌து. இந்நிலையில் மத்திய அரசின் பங்குகளை கேரள அரசே வாங்கியுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தை புனரமைக்க 77 கோடி ரூபாயும், ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை தொகை வழங்க 14 கோடி ரூபாயும் கேரள அரசு வழங்கும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாலக்காட்டில் உள்ள இன்ஸ்ட்ரூ மெண்டேஷன் தொழிற்சாலையை மத்திய அரசு விற்க முயன்றபோது அதையும் கேரள அரசே வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்