குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்:விலையை உயர்த்தியது மத்திய அரசு

மத்திய அரசு கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 40 ரூபாய் உயர்த்தியுள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்:விலையை உயர்த்தியது மத்திய அரசு
x
2022-23 ம் விற்பனை ஆண்டுக்கான பல்வேறு ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 40 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதார விலை  2 ஆயிரத்து 15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல கடுகுக்கான குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 400 ரூபாய் உயர்த்தப்பட்டு 5 ஆயிரத்து 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மக்காச்சோளத்திற்கான குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ஆயிரத்து 600 ரூபாயில் இருந்து ஆயிரத்து 635 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் பருப்பு வகைகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை 5 ஆயிரத்து 230 ஆகவும் card 6 சூரியகாந்தி எண்ணெய் வித்துக்கான குறைந்த பட்ச ஆதார விலை 5 ஆயிரத்து 441 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்