மம்மூட்டியின் 70வது பிறந்தநாள் - மொபைல் போன்களால் வடிவமைக்கப்பட்ட ஓவியம்

கேரளாவில், பிரபல நடிகர் மம்மூட்டியின் முகத்தை மொபைல் போன்களால் ரசிகர் ஒருவர் ஓவியமாக வடிவமைத்துள்ளார்.
மம்மூட்டியின் 70வது பிறந்தநாள் - மொபைல் போன்களால் வடிவமைக்கப்பட்ட ஓவியம்
x
கேரளாவில், பிரபல நடிகர் மம்மூட்டியின் முகத்தை மொபைல் போன்களால் ரசிகர் ஒருவர் ஓவியமாக வடிவமைத்துள்ளார். நடிகர் மம்முட்டியின் 70 வது பிறந்த நாள் மற்றும் அவர் திரையுலகத்திற்கு அடி எடுத்து வைத்து 50 ஆவது ஆண்டு  நிறைவு அடைகிறது. இதனையடுத்து, கேரள மாநிலம் கொடுங்ஙல்லூர் பகுதியைச் சேர்ந்த டாவின்சி சுரேஷ் என்ற ஓவியர், வித்தியாசமான ஓவியம் ஒன்றை தீட்ட திட்டமிட்டார். 400 சதுர அடி அளவில் 600 மொபைல் போன் மற்றும் பவுச், ஸ்கிரீன் கார்டு  உள்ளிட்ட 6,000 உதிரிபாகங்களை பயன்படுத்தி ஓவியம் வடிவமைத்தார். நடிகர் மம்மூட்டியின் வித்தியாசமான ஓவியம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்