ஜவுளித்துறையில் ஊக்கத்தொகை திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜவுளித்துறையில் உற்பத்திக்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜவுளித்துறையில் ஊக்கத்தொகை திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
ஜவுளித்துறையில் உற்பத்திக்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜவுளித்துறையில் உற்பத்திக்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார். 

இதன் மூலம் 5 ஆண்டுகளில் 10 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், ஐந்து ஆண்டுகளில் 19 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜவுளித்துறையில் ஐந்து ஆண்டுகளில் 3 லட்சம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்படும் என்றும்,  7.5 லட்சம் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும் பல லட்சம் மக்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றும் பியுஷ்கோயல் கூறினார். தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா , பஞ்சாப் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைவார்கள் என, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்