"பிரிட்டிஷ்காரர்களே மோதலுக்கு காரணம்"- மோகன் பகவத்

இந்தியாவில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி பிரிவினையை தூண்டியது பிரிட்டிஷ்காரர்கள் தான் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ்காரர்களே மோதலுக்கு காரணம்- மோகன்  பகவத்
x
புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்து என்பது இனம், மதம் மற்றும் மொழியின் அடையாளத்தைக் குறிக்கும் சொல் இல்லை என்றும், அனைத்து தரப்பு மக்களுக்குளின் உயர்வுக்கான பாரம்பரிய பெயர் என்றும் கூறினார். ஒவ்வொரு இந்தியனும் இந்து என்ற மோகன் பகவத், இந்துக்களுடன் வாழ்ந்தால் எந்த சலுகைகளும் கிடைக்காது என இஸ்லாமியர்களிடமும், இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என இந்துக்களிடமும் கூறி இரு தரப்புக்கிடையே பிரிட்டிஷார் மோதலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இதனால் தான் இரு தரப்பினரிடையே மோதலும், நம்பிக்கையின்மையும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மோகன், அனைவரும் ஒரே நாடாக ஒன்றுபட்டு இருப்போம் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்