தீவிர நோய் பாதிப்பு பகுதியான கேரளா..!

விலங்குகளால் அதிகளவில் நோய் பரவும் தீவிர பாதிப்பு பகுதியாக சீனாவை தொடர்ந்து கேரளா உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர நோய் பாதிப்பு பகுதியான கேரளா..!
x
விலங்குகளால் அதிகளவில் நோய் பரவும் தீவிர பாதிப்பு பகுதியாக சீனாவை தொடர்ந்து கேரளா உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விலங்குகளால் ஏற்படும் நோய் பாதிப்பு குறித்த ஆய்வில் இத்தாலி, அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.  

அதில், பூமியின் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றமும், கால்நடை புரட்சியும் வவ்வால்களிடமிருந்து வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.  காடுகளின் அழிவு, செல்ல பிராணிகளின் நெருக்கம் உள்ளிட்டவை விலங்கியல் நோய்கள் ஏற்பட முக்கிய காரணங்களாகவும் உள்ளன. 

பாலூட்டிகளாலும் நோய் பரவுவதாகவும், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா வைரஸ்களால் நோய் பரவுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாலூட்டிகளில் வைரஸின் முக்கிய காரணியாக வவ்வால்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  

இந்த நிலையில் சீனா, கேரளா, ஜாவா, பூடான், கிழக்கு நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியா ஆகியவை தீவிர நோய் பாதிப்பு பகுதிகளாக உள்ளன. கேரளாவில் அதிக மழைப்பொழிவு  மற்றும் மேற்குதொடர்ச்சிமலை காடுகள் இருப்பதால் விலங்கியல் நோய்கள் பரவுவதாகவும், பழங்களுக்காக வவ்வால்கள் குடியிருப்பு பகுதிக்கு ஈர்க்கப்படுவதால் மனிதனுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்