கற்பித்தல் புனிதமானது - ஆசிரியர்களை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி

கற்பித்தல் என்பது புனிதமான கடமை என்பதால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான உறவு குடும்ப உறவாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கற்பித்தல் புனிதமானது - ஆசிரியர்களை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி
x
கற்பித்தல் என்பது புனிதமான கடமை என்பதால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான உறவு குடும்ப உறவாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஆசிரியர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் மோடி காது கேளாதோருக்கான சைகை மொழி அகராதி, பார்வையற்றவர்களுக்கான ஆடியோ புத்தகங்கள் வெளியிடுவது உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பின்னர் ஆசிரியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், கொரோனா காலத்தில் மாணவர்களின் எதிர்காலத்திற்காக உழைத்த ஆசிரியர்களின் பணி ஈடு இணையற்றது என பாராட்டினார்.

தேசிய கல்வி கொள்கை உருவாக்கத்தில் இருந்து அதனை நடைமுறை படுத்துவது வரை கல்வியாளர்கள், நிபுணர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும், இந்த பங்களிப்பு புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்வதோடு மட்டுமில்லாமல் சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க பாடுபட வேண்டும் என்றும் கூறினார். 

துரிதமாக மாறிவரும் இந்த யுகத்தில் ஆசிரியர்கள் புதிய தொழில் நுட்பத்தை  விரைவாக கற்க வேண்டும் என அறிவுறுத்திய பிரதமர், ஆசிரியர்கள் புதிய கற்றல் வழி முறைகளை அறிந்து கொண்டால் தான் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு சிறப்பாக தயாராவார்கள் என கூறினார்.  கற்பித்தல் ஒரு தொழிலாக மட்டும் இல்லாமல் புனிதமான தார்மீக கடமையாக இருப்பதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு, குடும்ப உறவாக இருக்க வேண்டும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்