விவசாயிகள் மீது தடியடி நடத்தியதால் கண்டனம் - போராட்டம் அறிவித்த விவசாயிகள்

விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து தலைமை செயலகம் முற்றுகையிட உள்ளதாக வெளியான அறிவிப்பால் அரியானாவில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மீது தடியடி நடத்தியதால் கண்டனம் - போராட்டம் அறிவித்த விவசாயிகள்
x
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக கடந்த 28ம் தேதி அரியானாவில் போராட்டத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இதனை கண்டித்து இன்று அரியானா மாநில தலைமை செயலகத்தை முற்றுகையிட உள்ளதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்த  கர்னல் மாவட்டத்தில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. வாட்சப், பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்னல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்