கொரோனா தீவிர நோயாளிகளுக்கு Tocilizumab செலுத்தப்படுகிறது

கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் டோஸிலிசுமாப் (Tocilizumab) மருந்தை இந்தியாவில் தயாரிக்க ஹைதராபாத்தை சேர்ந்த ஹெடிரோ நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தீவிர நோயாளிகளுக்கு Tocilizumab செலுத்தப்படுகிறது
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தீவிர நோயாளிகளுக்கு ஃபெவிபிரவிர்  (Favipiravir), ரெம்டெசிவிர் (Remdesivir )மற்றும் டோஸிலிசுமாப் (Tocilizumab) உள்ளிட்ட மருந்துகள் செலுத்தப்படுகிறது. டோஸிலிசுமாப் (Tocilizumab) மருந்தை ஸ்விஸ் ஃபார்மா நிறுவனமான Roche தயாரித்து இந்தியாவுக்கு விற்பனை செய்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலை  உச்சத்தின்  போது Tocilizumab உள்ளிட்ட மருந்துகளுக்கு இந்தியாவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மத்திய அரசு மேற்கொண்ட இறக்குமதி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நிலைமை சீரானது. இந்நிலையில் டோஸிலிசுமாப் (Tocilizumab)  மருந்தை இந்தியாவில் தயாரிக்கவும் அதன் மீது மருத்துவ பரிசோதனை மேற் கொள்ளவும் ஹைதராபாத்தை சேர்ந்த ஹெடிரோ நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அவசரகால பயன்பாடு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது. டோஸிலிசுமாப் (Tocilizumab) மருந்துக்கு சர்வதேச அளவில் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மத்திய அரசு வழங்கியுள்ள இந்த அனுமதி முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என ஹெடிரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்