ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு - காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார்

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே நகரில் நடைபெற உள்ள ஷாங்கை கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு - காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார்
x
செப்டம்பர் 16 மற்றும் 17இல் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே நகரில் ஷாங்கை கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. சீனா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கஸகஸ்த்தான், கைர்கைஸ்தான் ஆகிய எட்டு ஆசிய நாடுகள் ஷாங்காய் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த மாநாட்டில் காணொளி மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச பயங்கரவாதம், ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான்கள் பற்றி பிரதமர் மோடி தனது உரையில் பேச வாய்ப்புள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட எட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டிற்கு தஜகிஸ்தான் தலைமை தாங்க உள்ளது. ஆப்கானிஸ்தானின் வடக்கு எல்லையில் தஜகிஸ்தான் அமைந்துள்ளது குறிபிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்