6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் நேரில் சென்று ஆய்வு

கர்நாடகாவில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இரண்டாம் கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
x
கர்நாடகாவில் கடந்த மாதம் முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று 6 முதல் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னதாக வகுப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு ஒரு வகுப்பில் 20 பேர் மட்டுமே அமரவைக்கப்பட்டனர். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தினசரி உடல்வெப்பநிலை பரிசோதிப்பதுடன், அடிக்கடி கைகளை சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வரும் கடிதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வர விருப்பம் இல்லாத மாணவர்கள் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகள் மூலம் படிக்கலாம் என  கல்வித்துறை கூறியுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு நேரடியாக சென்ற கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்