நிபா வைரஸ் தாக்குதலால் சிறுவன் உயிரிழப்பு - சிறுவனுடன் தொடர்பில் இருந்த 17 பேர் கண்காணிப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்ப்பில் இருந்த 17 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
நிபா வைரஸ் தாக்குதலால் சிறுவன் உயிரிழப்பு - சிறுவனுடன் தொடர்பில் இருந்த 17 பேர் கண்காணிப்பு
x
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்ப்பில் இருந்த 17 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இறந்த சிறுவனின் வீடு உள்ள பகுதிக்கு வாகன போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். அங்கிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதி தீவிர கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல், பழூர், நாயர்குழி, கூலிமாட் மற்றும் புதியதாம் வார்டுகளும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. காய்ச்சல் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே வைரஸ் தொற்றின் ஆரம்ப தொடர்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்