பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 100 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கக்கூடும் - இந்தியாவிற்கு எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 100 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கக்கூடும் என ஐஐடி நடத்திய ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 100 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கக்கூடும் - இந்தியாவிற்கு எச்சரிக்கை
x
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 100 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கக்கூடும் என ஐஐடி நடத்திய ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐஐடி ஆய்வு முடிவுகள் குறித்து விரிவாக பார்ப்போம்... 

அண்மை காலமாக அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் இயற்கை பேரிடர்கள், பருவநிலை மாற்றத்தின் கோரத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இது பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.  புவி வெப்பமயமாவதால், பனிமலை உருகுதல், கடல் மட்டம் உயர்வு, சீரற்ற பருவமழை என பல சிக்கல்கள் உண்டாகி வருகின்றன..

இதுகுறித்து ஐஐடி கவுகாத்தியுடன் இணைந்து ஐஐடி பெங்களூரு நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன...

நாட்டில் உள்ள 612 மாவட்டங்களும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கக்கூடும் எனவும் குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள 100 மாவட்டங்கள் மிகவும் பாதிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதில் 70 சதவீத மாவட்டங்கள் ஜார்க்கண்ட், மிசோரம், ஒடிசா, சத்தீஷ்கர், அசாம், பீகார், அருணாச்சல் பிரதேசம் மாநிலங்களை சார்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது


மறுபக்கம் புவி வெப்பமயமாதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிபுணர் குழு, தொழில் வளர்ச்சிக்கு முன்னரே பூமியின் வெப்பநிலை ஒன்று புள்ளி ஒன்று சதவீதம் இருந்ததாகவும், இது அடுத்த 20 ஆண்டுகளில் ஒன்று புள்ளி சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது..

இதனால் இந்தியா பெருமளவில் பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ள நிபுணர்குழு தொடர்ந்து வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்களை சந்திக்க நேரும் என குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் விவசாயம், சுகாதாரம், நீர்வளத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது..



Next Story

மேலும் செய்திகள்