"ஊரடங்கு கட்டுப்பாடு தொடரும்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தொடரும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடு தொடரும் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
x
கொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை  முழு ஊரடங்கு  மற்றும் இரவு ஊரடங்கு தொடரும் என முதல்வர் பினராயி விஜயன்  தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாக  திருவனந்தபுரத்தில் மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்ததாக கூறினார். மேலும் தடுப்பூசியின் முதல் டோஸ் 18 வயதுக்கு மேற்பட்ட 75 சதவிகித மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 60 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாநில மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்