உ.பி.யில் பரவும் டெங்கு காய்ச்சல் - பிரோசாபாத்தில் 40 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 40 குழந்தைகள் உள்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதிதீவிர பாதிப்புக்கு உள்ளன குழந்தைகளுக்கு ரத்த கசிவு ஏற்பட்டிருந்ததாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் பரவும் டெங்கு காய்ச்சல் - பிரோசாபாத்தில் 40 குழந்தைகள் உயிரிழப்பு
x
உத்தரபிரதேச மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பிரோசாபாத் மாவட்டத்தில் 10 நாட்களில் 40 குழந்தைகள் உள்பட 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஹாபூர்,  எடாக். மீரட், மதுரா, ஆக்ரா மாவட்டங்களில் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரோசாபாத் மாவட்டத்தில் குழந்தைகளிடையே காணப்பட்டது அதிதீவிரமான டெங்கு ஹெமரா‌ஜி‌க் காய்ச்சல் என உலக சுகாதாரத்துறை தன்னிடம் தெரிவித்திருப்பதாக மாவட்ட  மாஜிஸ்திரேட் சந்திரா விஜய் சிங் தெரிவித்துள்ளார். ஹெமரா‌ஜி‌க் காய்ச்சல் மிகவும் அபாயகரமானது என அமெரிக்க நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் தட்டணுக்கள் திடீரென சரிந்து, அவர்களது உடல் உறுப்புகளில் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். காய்ச்சல், வயிற்றுப்போக்குடன் குழந்தைகள் மருத்துவமனைகளில் சேரும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வசதியில்லை என்றும் போதிய கவனிப்பு இல்லை என்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மாநில அரசு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. இதற்கிடையே கொரோனா 2-வது அலையை மோசமாக கையாண்டதால் நேரிட்ட விளைவுகளில் இருந்து,  யோகி ஆதித்யநாத் அரசு பாடம் படிக்கவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்